தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகின்றது. அதனைப் போலவே ஏற்கனவே தகுதியான குடும்ப தலைவிகள் மற்றும் மேல்முறையீடு செய்த இரண்டு லட்சம் பேருக்கு இன்று வங்கி கணக்கில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2000 ரூபாய் வழங்கப்படுகின்றது.