அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது தற்போது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்து 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த சமயத்தில் சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கியதில் ரூ.26.61 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் தெரிவித்தது.

மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்துவரும் நிலையில் தற்போது முதல் கட்டமாக எஸ்பி வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பத்து பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது.