திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது தற்போது அறப்போர் இயக்கம் ஊழல் புகார் தெரிவித்துள்ளது. அதாவது அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னுடைய மகன்கள் மூலமாக 411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளது.

அவர்கள் ஆக்கிரமித்து அரசு நிலம் சென்னை ஜிஎஸ்டி சாலையில் இருப்பதாக கூறியுள்ள நிலையில் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை, முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர்களின் செயலாளர்களுக்கு அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது. மேலும் டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல் நிறுவனத்தின் மூலமாக அமைச்சரின் மகன்கள் அந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.