வங்காளதேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் தற்போது பிரதமர் ஷேக் ஹசீனா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் ராணுவ தளபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் நாட்டு மக்களுடன் உரையாற்றிய அவர் வங்காள தேசத்தில் இராணுவ ஆட்சி அமையும் என்றும் புதிய அரசு அமையும் இராணுவம் உதவும் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்நாட்டின் தலைமை ராணுவ தளபதி வங்காள தேசத்தில் தற்போது ராணுவ ஆட்சி அமைய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.