காங்கிரஸ் கட்சியின் எம்பி பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதாவது ராகுல் காந்தி வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி வேட்பாளராக முதல் களம் இறங்கினார்.

இவர் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட நிலையில் வயநாடு தொகுதியில் 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்திக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் அவர் இன்று கேரள புடவை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்த நிலையில் கையில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஏந்தியபடி வயநாடு எம்பி ஆக பொறுப்பேற்றுக்கொண்டார்.