
தமிழக வெற்றி கழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராக இருந்த முள்ளிமுனை PP ராஜா திடீரென கட்சியிலிருந்து விலகினார். இவர் தமிழக வெற்றிக்கழகத்தில் இருந்து விலகிய நிலையில் தற்போது அதிமுக கட்சியில் இணைந்துள்ளார்.
அதன்படி தன்னுடைய ஆதரவாளர்களுடன் அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஏ முனியசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த செய்தியை அதிமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது.
மேலும் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் கடந்த நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் இன்னும் தேர்தலையே சந்திக்காத நிலையில் கட்சியிலிருந்து சில நிர்வாகிகள் இப்படி விலகுவதும் கட்சிப் பொறுப்புகளுக்கு பணம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.