
நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் 1118க்கு விற்பனையான வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை 200 குறைந்து 918க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் யாரும் கூடுதல் விலை கொடுக்க வேண்டாம். அதேசமயம், நேற்று சிலிண்டர் கோரி புக் செய்தவர்களுக்கு விலையில் மாற்றம் இருக்காது. 1118 என்ற விலையில் தான் சிலிண்டர் வழங்கப்படும்.