காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள விஜயதாரணி விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் விரைவில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அந்த தொகுதியில் இந்த முறை பாஜக சார்பில் விஜயதாரணி போட்டியிட கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் கட்சியுடன் அதிருப்தி மற்றும் எதிர்பாராத அங்கீகாரம் கிடைக்காதது விஜயதாரணியை  இந்த முடிவுக்கு ஆளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் அமமுக என ஐந்து பேர் இடையே போட்டி நிலவ வாய்ப்புள்ளது.