
தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 முதல் 90 நாட்களுக்குள் அனைத்து வகை மசோதாக்கள் மீதும் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்.
பத்து மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆகினார். பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவிகளில் இருந்து ஆளுநர் நீக்கப்பட்டுள்ளார்.