நவம்பர் 6ஆம் தேதி முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சங்கததினர் அறிவித்துள்ளனர். லாரிகளுக்கு ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படுவதை எதிர்த்தும், 40% வரி உயர்வை எதிர்த்தும் வேலைநிறுத்தம் நடத்தப்பட இருக்கிறது. இதனால் சென்னையில் பால், காய்கறிகள், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.