சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை 2000-க்கும் மேல் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் இன்று ஒரே நாளில் மட்டும் 1480 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 8,410 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 67,280 ரூபாயாகவும் இருக்கிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 9174 ரூபாயாகவும், ஒரு சவரன் 73,392 ரூபாய் ஆகவும் இருக்கிறது.

மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 104 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கிறது.