தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக நாள்தோறும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. குறிப்பாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். சமீபத்தில் கோயம்புத்தூரில் ஒரு 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கரூரில் தற்போது ஒரு 10-ம் வகுப்பு மாணவியை மாணவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டி பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியை 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதோடு மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளான். மேலும் இதில் பலத்த காயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்