தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகின்றது.

இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பிற்பகல் ஒரு மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேசமயம் பல மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.