12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் 7ஆம் தேதி நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவர்களின் மனநலனை பாதிக்கக் கூடாது என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மே 8ஆம் தேதி +2 ரிசல்ட்களை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.