தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை அரசு அவர்களை கைது செய்கிறது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழக மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை அரசு மார்ச் 27-ஆம் தேதி 13 மீனவர்கள் கைது செய்தது. அந்த 13 மீனவர்களும் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள். தற்போது கைது செய்யப்பட்ட 13 மீனவர்களையும் இலங்கை அரசு விடுதலை செய்தது.