தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. தூத்துக்குடியில் பல இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடிந்த பாடில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் கூட சவால்கள் நீடிக்கின்றன. இதனால் தூத்துக்குடியில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே நெல்லையிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.