விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுகவுடன் தான் கூட்டணி என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது கும்பகோணத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 7 வருடங்களாக திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். திமுக கூட்டணியில் இருந்து சில சனாதன சக்திகள் எங்களை பிரிக்க முயற்சி செய்து வருகிறது.

ஆனால் அது ஒருபோதும் முடியாது. எதிர்வரும் தேர்தலிலும் கண்டிப்பாக திமுகவுடன் தான் கூட்டணி. இந்த கூட்டணி நிச்சயம் தொடரும். அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்று கூறினார். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய பாத்திரம் ஆக நான் இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக என்னை விமர்சிப்பவர்களின் உண்மையான கூறி திமுக தான். திருமாவளவன் கிடையாது. திமுகவை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னை ஒரு தூதாக பயன்படுத்தி அதனை சாதிக்க நினைக்கிறார்கள். மேலும் அது ஒருபோதும் முடியாது என்று கூறினார்.