
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் முதல் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக மாவட்டம் தோறும் 24 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் எஸ்பி திட்ட இயக்குனர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் ஆகியோர் அடங்கிய 24 பேர் கொண்ட குழு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தும். மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளிகளுக்கு வராத மாணவர்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.