ஆளுநர் ரவி தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறி அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கூட ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பதாகவும் அவர் மீது புகார்கள் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார் என்பதை நாளை மறுநாள் தெரிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இன்னும் 24 மணி நேரம் இருப்பதால் அரசியல் சாசனப்படி ஆளுநர் தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.