
அதிமுக ஆட்சிக்காலத்தின் போது முன்னாள் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அப்போது இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். அதன்படி மொத்தம் 33 பேரிடம் 3 கோடி ரூபாய் வரை இவர் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த மாதம் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி தொடர்பான வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.