
தமிழகத்தில் குமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் இந்திய கடல்சார் தகவல் மையம் கள்ளக்கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என்பதால் கடற்கரையோரம் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடீரென கடல் கொந்தளித்து கரையோரங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதையே கள்ளக் கடல் நிகழ்வு என்கின்றனர்.