குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் தொகுதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிட நிலையில் 2-வது முறையாக அவர் வெற்றி வாகை சூடியுள்ளார். அதன்படி வாக்கு எண்ணிக்கை தொடங்கியதன் முதல் தொடர்ந்து முன்னிலையில் வகித்த அமித்ஷா காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சோனல் படேலை விட 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். மேலும் அமித்ஷாவுக்கு நிகரான காங்கிரஸ் வேட்பாளரை நியமிக்க தவறியது தான் தேர்தலுக்கு முன்பே அமித்ஷாவின் வெற்றியை உறுதி செய்ததாக கூறப்படுகிறது.