
பிரபல ரவுடிகள் ராக்கெட் ராஜா, நெடுங்குன்றம் சூர்யா மற்றும் லெனின் ஆகியோருக்கு தற்போது சென்னைக்குள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சென்னை மாநகருக்குள் நுழையக்கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையம் அறிவித்துள்ளது.
இவர்கள் மூவரும் ஏ ப்ளஸ் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக இருக்கும் நிலையில் ஒரு வருடத்திற்கு சென்னைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நீதிமன்ற வழக்கு மற்றும் காவல் நிலைய விசாரணை போன்றவைகளுக்காக வரலாம்.
மற்றபடி அவர்கள் சென்னைக்குள் வரக்கூடாது. மேலும் இவர்களால் தீங்கு ஏற்படக்கூடிய சூழல் மற்றும் பிரச்சனை வரக்கூடிய அபாயம் இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.