
மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் தனிநபர் சராசரி ஆண்டு வருமானம் 2022-23ல் ரூ. 2.48 லட்சம் ஆக உள்ளது.
தேசிய சராசரி தனிநபர் வருமானமான ரூ. 1.69 லட்சத்தை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.