மதுரை மாவட்டம் கே.கே நகரில் தனியார் மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள தனியார் மழலையர் பள்ளி ஒன்றில் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஆரூத்ரா என்ற மூன்று வயது பெண் குழந்தை படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று குழந்தை பள்ளியின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தபோது 15 அடி தண்ணீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்துள்ளது.

இதையடுத்து 20 நிமிடங்கள் கழித்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கோடை கால விடுமுறை நாட்களில் பள்ளி மற்றும் மழலையர் பள்ளிகளில் அனுமதியின்றி பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.