முப்படைகளில் தலைமை தளபதியாக இருந்தவர் பிபின் ராவத். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி கோவையிலிருந்து உதகைக்கு ஹெலிகாப்டரில் தனது மனைவி மதூலிகா உள்ளிட்ட 11 பேருடன் சென்றார். அப்போது அந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். நாட்டின் முப்படை தலைமை தளபதி உயிரிழந்தது சர்ச்சையான நிலையில், விமானப்படை விபத்துக்கள் தொடர்பாக பாதுகாப்புத்துறை நிலைக்குழு இந்த சம்பவத்தை குறித்து ஆய்வு செய்ய தொடங்கியது.

2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான அந்த குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 5 ஆண்டுகளில் விமானப்படை தொடர்புடைய 34 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது. மேலும் பிபின் ராவத் உயிரிழந்ததிற்கு அவரது ஹெலிகாப்டரை இயக்கிய குழுவின் தவறு தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.