
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இதனை எதிர்த்து திமுக தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனிடையே அமைச்சருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது எனக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தற்போது அறுவை சிகிச்சை நடந்து முடிந்து மருத்துவமனை கண்காணிப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருந்து வருகின்றார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.