தமிழ்நாடு வனத்துறையில் ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் கிருஷ்ணகுமார் கௌசல். இவர் ஓய்வு பெற்ற பின் கிடைத்த பணத்தை அனைத்தையும் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்துள்ளார். ஆனால் ஒரே மாதத்தில் அதிகபச்சமாக ரூ. 70 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார்.

இவர் மொத்தம் ரூபாய் 6.8 கோடி ரூபாய் இழந்ததாக கூறப்படுகிறது. தான் ஏமாந்ததை உணர்ந்த கிருஷ்ணகுமார் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.