
அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதாவது அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக சூரியமூர்த்தி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவர் இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரிடமும் கருத்து கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி சூரிய மூர்த்தி, ராம்குமார் ஆதித்தன் மற்றும் புகழேந்தி ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தனர். இந்த வழக்கில் வாதங்கள் மற்றும் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று தற்போது உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.