
மதுரையில் இன்று 2வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்ற தலைப்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று உள்ளார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது, கூட்டாட்சி என்ற சொல்லே ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. ஒன்றிய அரசால் அதிக பாதிப்பு அடைவது நானும், கேரளா முதல்வரும் தான். எங்கள் பேச்சுக்களை வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாம். மாநிலங்களவை அளிக்கும் பாசிச பாஜக ஆட்சியை ஒழித்தாக வேண்டுமென்று அவர் கூறினார்.