தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக லியோ திரைப்படம் வெளியான நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்தத் திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 16 நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த தகவலை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது கொண்டாடி வருகிறார்கள். நடிகர் விஜய், பிரசாந்த், லைலா, சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.