
தமிழகத்தில் சுற்றுலா தளங்களான கொடைக்கானல், உதகை போன்ற இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதோடு விடுமுறை நாட்களில் ஏராளமானோர் தங்களது நேரங்களை அங்கு செலவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி உதகைக்கு வார நாட்களில் 6000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8000 சுற்றளவு வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நீலகிரி கூடுதல் ஆட்சியர் தரப்பில் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. அதில் கோடை காலத்தில் மலர், பழக் கண்காட்சி நடத்தப்படுவதால் கூடுதல் வாகனங்களுக்கான அனுமதி தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் உதகைக்குச் செல்ல கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி தர வேண்டும் என்ற அவசியம் வந்தால் மேலும் 500 வாகனங்களுக்கு அனுமதி தரலாம் என்று உத்தரவிட்டுள்ளது.