சட்டசபையில் 110 விதிகளை கீழ் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது, புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாள் ஏப்ரல் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வருகிற 29ஆம் தேதி முதல் மே மாதம் 5-ம் தேதி வரை ‘தமிழ் வார விழா’ கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்கங்கள் நடைபெறும். பள்ளிகளில் பேச்சு கட்டுரை போட்டிகள் நடத்தப்படும். தமிழில் சிறந்து விளங்கும் இளம் கவிஞருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். செந்தமிழை பரப்ப இந்த விழா பயன்படும் என்றும், தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம் என்றும் தெரிவித்தார்.