முன்னதாக மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர பாட்னாவில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்பதற்கு பலத்தை எதிர்ப்பு எழுந்தது. அதன் பிறகு தற்போது அவர் மராத்தி கட்டாயம் என்று கூறி வருகிறார். மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக இந்தியை அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் முதலமைச்சருக்கு ஏற்பட்ட அச்சத்தின் வெளிப்பாடாகவே இதை பார்க்க வேண்டி உள்ளது என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதோடு மூன்றாவது மொழியாக மராத்தி மட்டுமே முக்கியம் என்று அறிவித்துள்ளார். மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயம் இல்லை என்று அவரது நிலைப்பாட்டை ஒன்றி பாஜக அரசு ஏற்கிறதா?. NEP யின் படி மூன்றாவது மொழியை கட்டாயமாக கற்க வேண்டிய அவசியம் இல்லை என அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு தெளிவான உத்தரவை பிறப்பிக்குமா?. தமிழ்நாட்டுக்கான ரூ.152 கோடியை நிறுத்தி வைத்துள்ளது என்ன காரணத்திற்காக என்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.