நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் தற்போது தொடங்கியது. இக்கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. அப்போது முதலைமைச்சர் கூறியதாவது, “நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விரிவான ஆய்வு செய்யப்பட்டது.

அக்குழு அளித்த பரிந்துரையை அடுத்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்ட மசோதா நிறைவேற்றி அனுப்பினோம். ஆளுநர் தனது கடமையைச் செய்யாமல் நீண்ட காலம் கிடப்பில் போட்டு மசோதாவை திரும்ப அனுப்பினார். மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். பிரதமர், உள்துறை அமைச்சரிடம் இதற்கு ஒப்புதல் அளிக்க கோரினோம்

நீண்ட போராட்டத்தின் விளைவாக ஆளுநர் அம்மசோதாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தார். அதற்கு அடுத்தும் ஒப்புதல் கோரி பல முறை கடிதம் வாயிலாக, நேரில் சந்தித்து, நாடாளுமன்றத்தில் பேசி வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதனை ஏற்காமல் அம்மசோதாவை ஒன்றிய அரசு நிராகரித்தது. இதனால், நம்முடைய போராட்டம் எவ்விதத்திலும் குறையாது”