நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நிர்வாகத்தினருக்கு கீழ் மூன்று கோவில்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் ஒரு கோவிலை மட்டும் தனியாக பிரிக்க வேண்டும் என்று கணேசன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில்களுக்கு எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது. கோவில்களை சாதி அடிப்படையில் நிர்வாகிப்பது மத நடைமுறையும் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து நீதிபதி கூறியதாவது, பெரும்பாலான பொது கோவில்கள் குறிப்பிட்ட சாதியினரின் கோவில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளன.

சாதி பாகுபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் மதப்பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.