முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மூன்று மாதங்களுக்கு முன்பே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் புகார் அளித்துள்ளார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நெல்லையில் நேற்று ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதோடு சம்மந்தப்பட்ட நபர் காவல்த்துறையினர் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் ரெட்டியார்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த முகமது தெளபிக் (எ) கிருஷ்ணமூர்த்தியை காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடிக்கும் போது, அவர் காவல்துறையினர் அரிவாளால் வெட்டியபோது துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.