சாம்சங் நிறுவனம் உலக அளவில் முன்னணி மின்னணு நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர் டி ஆர் பி ராஜா கூறியதாவது, தற்போது உள்ள தொழிலாளர்கள் மீது நம்பிக்கை வைத்து மேலும் ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக சாம்சங் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

தொழிலாளர்கள் பிரச்சனையை முதலமைச்சர் திறம்பட கையாண்டார் என்று தெரிவித்தார். மேலும் அதிமுக ஆட்சியில் கியா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வராமல் வேறு மாநிலத்திற்கு சென்றதாக விமர்சனம் தெரிவித்தார்.