
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். நாடே எதிர்பார்த்த 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி மந்திரி தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். அவர் கூறியதாவது, இந்த பட்ஜெட் 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்திய பொருளாதாரம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக நாடுகள் இந்தியா மீது வைத்துள்ள நம்பிக்கை கடந்த 10 வருடங்களில் அதிக அளவில் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் காப்பீடு துறையில் 100% அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் swiggy, zomato, செப்டோ உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டெலிவரி ஊழியர்கள் மற்றும் பகுதிநேர பணியாளர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.