
எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலையை ரூ.1000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் டன் ஒன்றுக்கு ரூ.1000 விலையை உயர்த்தி க்ரஷர் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கல்குவாரியில் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது இது குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில் எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி உயர்த்தப்பட்ட விலையில் இருந்து ரூபாய் 1000 குறைத்து விற்க முடிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூபாய் 33 ஆக நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.