தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம் எனக் கூறி அதனை ரத்து செய்தது. பின்னர் அந்த பத்து மசோதாக்களுக்கும் தங்களுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியதோடு மசோதாக்கள் மீது இன்னும் 90 நாட்களுக்குள் ஆளுநர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியது.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்  ரவியின் போக்குகளை உச்ச நீதிமன்றம் கண்டித்த பின்பும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் துளியும் மதிக்காமல் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அடாவடியாகவும் சட்டவிரோதமாகவும் செயல்படும் அவரின் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். ஆளுநரின் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசு சட்டபூர்வமாக தடுத்து நிறுத்த வேண்டும். ரவியை உடனே பதவியிலிருந்து குடியரசு தலைவர் நீக்க வேண்டும் என்று விசிக எம். பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.