டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது வருகிற செப்டம்பர் 14ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் மொத்தம் 2327 பணியிடங்களுக்காக நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வுகளுக்கு சுமார் 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.