
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதே சமயம் தினந்தோறும் காரசாரமான விவாதங்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, தமிழ்நாட்டு அரசின் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000-த்தை பயனுள்ள முறையில் பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பெரும்பாலும் சேமிப்புக்காகவும் குழந்தைகளின் படிப்பு செலவு மருத்துவச் செலவுக்காகவும் பயன்படுத்துகிறார்கள். தேர்தல் நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மகளிர் உரிமைத் தொகையை அறிவித்துவிட்டு, இப்போது 15 லட்சம் மகளிரை இந்த திட்டத்திலிருந்து நீக்கி உள்ளது அம்மாநில பாஜக அரசு என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.