
திமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய ஒன்றிய பிரதிநிதியுமான சேலம் எழிலரசன் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். திமுக ஆட்சியில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை.
மேலும் கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதோடு உங்கள் பேரனுக்கு பேனர் வைக்கும் போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை. இதற்கு நாங்கள் தயாராக இல்லை என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.