
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அருமை தோழர்களே.. இது 2024 நாடாளுமன்ற பொது தேர்தலை சந்திக்கப் போவதற்கான ஒரு ஆயத்தம். ஆண்ட கட்சி, ஆளும் கட்சி… திமுக , அதிமுக போன்ற பெரிய கட்சிகள் வாக்குச்சாவடி பணிக் குழுவை நியமனம் செய்து, தேர்தல் பணிகளை தொடங்கிவிட்ட நிலையில் ? அடுத்து தேர்தல் பணியில் ஈடுபட்டு இருக்கிற ஒரு பேரியக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தொடங்கி விட்டோம்… நவம்பர் மாதம் 13 நாடாளுமன்ற தொகுதிகளிலும் என்னுடைய பிரச்சாரம் தொடங்குகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் 13 நாடாளுமன்ற தொகுதிகளில் நான் நேரடியாக உங்கள் தொகுதிக்கு வர இருக்கிறேன். நவம்பர் மாதத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
சனாதன சக்திகளை வீழ்த்துவதற்கான களத்தை அமைத்து விட்டோம். 2019 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் இருந்து சனாதன சக்திகளை அம்பலப்படுத்தி வருகிற இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. மூச்சுக்கு மூச்சு… பேச்சுக்கு பேச்சு…. சனாதனத்தை தோலுரித்துக் கொண்டிருக்கின்ற இயக்கம். தமிழ்நாட்டில் இன்றைக்கு மூளை முடுக்கெல்லாம் சனாதனம் என்று எல்லோரும் உச்சரிக்கிறார்கள் என்றால் ? அது விடுதலைச் சிறுத்தைகளின் உழைப்பின் விளைச்சல் என தெரிவித்தார்.