அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தற்போது போலீசார் மோப்பநாய் மூலம் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் சோதனை செய்து வருகிறார்கள்.

மேலும் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.