பிரிக்ஸ் மாநாடு கூட்டமைப்பு  ரஷ்யாவில் உள்ள காசான் நகரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 5 சர்வதேச நாடுகளும் கலந்து கொண்டன. பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டமைப்பில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நடைபெற்ற அதே நேரத்தில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் மிகப்பெரிய சைபர் கிரைம் நடந்துள்ளது.

ரஷ்யா நாட்டின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தின் உள்கட்ட அமைப்பின் மீது அயல்நாட்டில் இருந்து சைபர் கிரைம் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகத்துறை தெரிவித்திருந்தது. ரஷ்யா வெளியுறவுத்துறை இதுபோன்று சமீப காலமாக பல சைபர் குற்றங்களை சந்தித்து வருகிறது. ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சைபர் தாக்குதல் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என வெளியுறவுத் துறை அமைச்சக பத்திரிகையாளர் மரியா சகரோவா கூறியுள்ளார்.