
திருமணங்கள் என்பது மறக்க முடியாத நிகழ்வாகும். ஆனால் இங்கு மணப்பெண் ஒருவர் செய்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவரது ஹல்தி விழாவில் மணமகன் நின்று கொண்டிருந்தபோது, மணப்பெண் மிகப்பெரிய டைனோசரை போல உடை அணிந்து வந்தார். அப்போது சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் சிரிப்புடன் கத்தினர்.
View this post on Instagram
இதையடுத்து டைனோசர் உடையிலிருந்து பெண் மணமகனுடன் நடனமாடுகிறார். அதன் பின் அவர் அந்த உடையை கழற்றுகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் வைரலான இந்த வீடியோ 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும், சமூக ஊடக பயனர்களிடமிருந்து எண்ணற்ற எதிர் வினைகளையும் குவித்துள்ளது.