சென்னை பெரும்பாக்கம் பகுதியில் கலைவாணன் (25) , சௌந்தர்யா (25) தம்பதியினர் வசித்து வருகிறார்கள் . நிலையில் கலைவாணன் சம்பவ நாளில் இரவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அவரது மனைவி அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. எனவே வெளியில் படுத்து உறங்கி உள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை பார்க்கும்போது கலைவாணன் பிணமாக கிடந்தார்.

அவரது தலையில் அம்மிக்கல்லை போட்டு யாரோ கொலை செய்துள்ளனர். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி கதவை திறந்து பார்த்த போது தான் இந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த கலைவாணனின் உடலை பார்த்து பதறிய அவரது மனைவி காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அந்தத் தகவலின் படி வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது, வசந்த் (21 )அதே பகுதியைச் சேர்ந்தவர் இவரது தாயை சில மாதங்களுக்கு முன்பு கலைவாணன் தகாத வார்த்தைகளால் திட்டி ,சண்டை போட்டுள்ளார். இந்த விரோதத்தின் காரணமாக வசந்த் மற்றும் அவனது நண்பர்கள் தமிழ், சந்தோஷ், அருண் ஆகியவருடன் இணைந்து இக்கொலையை செய்தது தெரியவந்தது. மேலும் குற்றவாளிகள் தப்பி ஓடி உள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் இறந்த கலைவாணன் மீதும் ஏழு கொலை மற்றும் கொலை மிரட்டல் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அப்பகுதியில் கஞ்சா தொழில் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளார் கலைவாணன். எனவே இந்த காரணங்களால் கொலை செய்யப்பட்டுள்ளாரா? என காவல்துறையினர் யூகித்து வருகின்றனர்.