நாடு முக்குவதும் ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் ஆகிய பிரபல நிறுவனங்கள் சேவைக் கட்டணங்களை உயர்த்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் சுமார் 2.50 லட்சம் பயனர்கள் தங்களது எண்களை BSNL நிறுவனத்திற்கு மாற்றியுள்ளனர்.

மேலும் 25 லட்சம் பேர் புதிதாக BSNL சிம் கார்டுகள் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற நிறுவனங்களின் ஆரம்ப கட்டணமே ரூ.199-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதே சேவையை BSNL நிறுவனம் ரூ.108-க்கு வழங்கி வருகிறது. தற்போது 4G சேவையை வழங்கி வரும் BSNL விரைவில் 5G சேவையையும் அறிமுகம் செய்ய இருக்கிறது.